நோயாளியிடம் தவறான அணுகுமுறையினால் செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸை சேர்ந்த 54 வயதான கேத்தரீன் பெர்னட் என்னும் பெண் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்தே மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் அண்மையில் சன்ரைஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்பொழுது அவர் மீது 31 வயதான மெடிரோஸ் என்னும் ஆண் செவிலியர் ஒருவர் அமர்ந்துள்ளார். அதனைக் கண்டு கேத்தரீன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரின் மீது மெடிரோஸ் கைவைத்து தவறாக நடந்துள்ளார்.
குறிப்பாக இதனை “கேத்தரீன் முதலில் கனவு என்று தூக்கக்கலக்கத்தில் நினைத்தேன். ஆனால் இது கனவு இல்லை உண்மை” என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை தொடந்து மெடிரோஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக அவரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் மெடிரோஸின் பெயில் தொகையாக $3,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் அடுத்த உத்தரவு வரும் வரை மெடிரோஸ் தனது செவிலியர் பணியை தொடர இயலாது.