மருத்துவமனையில் இருந்து பெண் அரசியல்வாதி தப்பித்து செல்லும் காணொளி காட்சியானது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டில் தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் மோசடி, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகளை செய்ததாக அந்நாட்டின் முன்னாள் பெண் அரசியல்வாதியான ஐடா மெர்லோனா ரெபோல்டோ அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் பொகட்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் உடல்நலக்கோளாறு காரணமாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பொழுது ரெபோல்டோவின் மகளான ஜடா விக்டோரியா மெர்லோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் தாயை தப்பிக்க வைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதாவது ரெபோல்டோவை கயிறு மூலம் மேலிருந்து கீழே குதிக்க வைத்து அதன் பின்னர் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான காணொளி காட்சியானது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.