Categories
உலக செய்திகள்

என்னவாக இருக்கும்….? மகாராணியாருக்கு மருத்துவர்கள் பரிந்துரை…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

மகாராணியார் அதிக அளவில் மது அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் மகாராணியான எலிசபெத் தற்பொழுது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் அவர் பொதுவாக கணவர் பிலிப், இளவரசி கேட், இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மற்றும் இளவரசி சோபி ஆகியோர் மட்டுமே நடப்பார்.

இந்த நிலையில் தற்பொழுது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அது காரணம் இல்லையாம். அதாவது மகாராணியாருக்கு வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பது சௌகரியமாக உள்ளதாம். அதனால் தான் அதன் உதவியுடன் நடக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து இனி மகாராணியார் அதிக அளவில் மது அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு விளக்கம் கேட்டபோது “மகாராணியார் உடல் நலம்  பாதிக்கப்படவில்லை. அவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவள விழா கொண்டாடவுள்ளார். அதாவது எலிசபெத் அவர்கள் மகாராணியாக பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதனையொட்டி மகாராணியார் பல்வேறு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம். இதனால் அவருக்கு பணி சுமை அதிகமாக இருக்கும். இது போன்ற நேரத்தில் அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் மது அருந்த வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மகாராணியார் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர் அல்ல என்பதும் உண்மையே.

Categories

Tech |