Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை புதுப்பித்து தராங்களா..? விறுவிறுப்பாக நடைபெறும் பணி… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…!!

மருத்துவமனை கட்டிட பணியின்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கண்டியபேரி பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்கள் அமைக்கப்படுகிறது. அதில் பெண்களுக்கு பொது மருத்துவ பிரிவு, அவசரகால தாய் சேய் பிரிவு, ஆண்களுக்கு பொது மருத்துவ பிரிவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்படுகின்றது. இந்தப் பணிகளுக்காக ஜப்பான் 28 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியது.
இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் சென்று அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் தாசில்தார் பகவதி பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |