Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குவிந்து கிடக்கும் கழிவுகள்….. மர்ம நபர்களின் அட்டூழியம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிரியன் சர்ச் ரோட்டோரங்களில் காலியான ஊசிகள் மற்றும் மருத்துவப் கழிவுகள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு 8 மணிக்கு மேல் அப்பகுதியில் நின்று மது குடித்துவிட்டு சிலர் பாட்டில்களை சாலையிலேயே போட்டு சொல்கின்றனர். அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |