Categories
உலக செய்திகள்

மருத்துவ குணமுள்ள வெள்ளை வெங்காயம்…. புவிசார் குறியீடு வழங்கல்…. அதிகாரியின் தகவல்….!!

வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடினை வழங்கி இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் என்ற பகுதியில் வெள்ளை வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெங்காயம் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது.

மேலும் மருத்துவத் தன்மை கொண்ட இந்த வெங்காயமானது இன்சுலினை சுரக்கின்ற தன்மை கொண்டது ஆகும். இந்நிலையில் வேளாண்மைதுறை மற்றும் கொங்கன் எனும் பல்கலைக்கழகம் சேர்ந்து இந்த வெங்காயத்திற்கு புவிசார் குறியீடினை வழங்ககோரி கடந்த 2019-ஆம் வருடம் ஜனவரி மாதம் அன்று விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த 29-ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்ட மும்பை காப்புரிமை பதிவாளர் அலுவலகம் அலிபாக்கின் புகழ்பெற்ற வெங்காயத்திற்கு புவிசார் குறியீடினை வழங்கி இருப்பதாக வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வெங்காய பயிரின் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |