Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவம் முடிந்து திரும்பும்போது விபத்த – 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துக்காக அனுமதித்தார். இந்த நிலையில் மருத்துவம் முடிந்து ஜெயராஜ் தம் மனைவி, மைத்துனர் ரன்னர் என்பவருடைய காரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி அருகே காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நசுங்கியதால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  செல்லும் வழியிலேயே ஜெயராஜின் மனைவியும் அவருடைய சகோதரரும் உயிரிழந்தனர். ஜெயராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |