Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இருக்கும் ரஜினி… நலம் விசாரித்த வைகோ…!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டால் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் ரசிகர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி வெளியான முதல் அவரின் ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்திடம் பல்வேறு தரப்பினரும் உடல் நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் மக்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலம் உடல்நலம் விசாரித்தார். அதற்குத்தான் நலமுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |