Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவமனையில் ஜடேஜா …. மீதமுள்ள போட்டியில் விளையாடுவாரா ….?

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்  செய்தது . இதில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களிலும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெறாது  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக அணியில் 3 போட்டியிலும்  ஜடேஜா விளையாடினர் .இந்த நிலையில் மீதமுள்ள  டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

ஏனெனில் லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது . ஆனாலும் அவர் போட்டி முடியும் வரை  தொடர்ந்து விளையாடினார்.இதனால் ஏற்பட்ட வலி காரணமாக ஜடேஜா ஸ்கேன் செய்ய  மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் .மேலும் அவர் மருத்துவமனைக்கு சென்ற புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு காயம் அடைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் இவர் மீதமுள்ள டெஸ்ட் போட்டியில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |