Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் ரஜினி… நலம் விசாரித்த முதல்வர்…!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அங்கு அனுமதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நடிகர் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் உடல் நலம் குறித்து விசாரித்தார் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |