Categories
உலக செய்திகள்

மருத்துவர்கள் கொடுத்த தேதி இதுதான்…? 3 வருட இடைவெளியில் நடந்த பிரசவம்…. பிரபல நாட்டில் ஆச்சரியம்….!!

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் 3 பிள்ளைகள் பிறந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் லாமர்ட் என்ற பெண்ணிற்கு 2015-ம் ஆண்டு சோபியாவும், 2018-ல், கியுலியனாவும் மற்றும் 2021 -ஆம் ஆண்டு மியா என 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் ஆகஸ்ட் 25 அன்று குழந்தைகள் பிறந்துள்ளனர். இதுகுறித்து கிறிஸ்டின் லாமர்ட் கூறியபோது “நாங்கள் எந்த விதமான திட்டமிடலும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகள் இடைவெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே முடிவு செய்தோம். ஆனால் 3 குழந்தைகளும் ஒரே தேதியில் பிறந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

ஏனெனில் 3 குழந்தைகளுக்கும் மருத்துவர்கள் கொடுத்த தேதி வேறொன்றாக தான் இருந்தது. எனினும் மூவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்களில் சோபியாவைக் கர்ப்பம் தரித்திருத்தபோது சிக்கல்கள் எதுவும் இல்லாமல் பிரசவம் நடைபெற்று ஆகஸ்ட் 23, 2015-ல் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் சோபியா 2 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 25-ல் பிறந்தார். இதனையடுத்து 2-வது முறையாக கியுலியனாவை கர்ப்பம் தரித்தபோது எனக்கு அடிக்கடி குமட்டல் இருந்தது. ஆனால் குழந்தை எந்தவித பாதிப்பும் இன்றி நலமாக இருந்தது.

அதன்பின் கியுலியனா ஆக்ஸ்ட் 29 தான் தான் பிறப்பார் என மருத்துவர்கள் தன்னிடம் கூறியிருந்தனர். இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக 4 நாட்களுக்கு முன் செயற்கைத் தூண்டலின் மூலமாக ஆகஸ்ட் 25-ல் கியுலியனா பிறந்தார். மேலும் 3-வது குழந்தையான மியாவை கர்ப்பம் தரித்திருத்தபோது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நான் தொடர் கண்காணிப்பில் இருந்தேன். இந்த முறை உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தீவிர வீக்கத்தின் காரணமாக 2 வாரங்களுக்கு முன்பாக செயற்கை முறையில் தூண்டப்பட்டு ஆகஸ்ட் 25-இல் மியாவை பெற்றெடுத்தேன்.

இதில் மியாவுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி பிரசவ தேதியாக மருத்துவர்கள் குறித்து கொடுத்திருந்த நிலையில் அவர் 14 நாட்கள் முன்பாகவே பிறந்தார். ஆகவே நாங்கள் இவை எதையும் திட்டமிடவில்லை. ஆனால் இது நம்ப முடியாத சிறப்பு வாய்ந்த தனித்துவமிக்க ஒரு உண்மை” என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மினசோட்டா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ராப் வாரன் கூறியபோது “ஒரே தேதியில் 3 குழந்தைகளைப் பெறுவதற்கு 10 லட்சத்தில் ஒரு வாய்ப்புதான் உள்ளது என்று கூறினார். இதுமட்டும் இன்றி கிறிஸ்டினின் குடும்ப நாயான 16 வயதுடைய கோடா பியரும் ஆகஸ்டு 25-ஆம் தேதி தான் பிறந்தது என்பது மற்றொரு ஆச்சரியமூட்டும் தற்செயல் ஆகும்.

Categories

Tech |