Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீண்ட நாளாக தீரவில்லை” ஸ்கேனில் தெரியவந்த உண்மை…. மருத்துவர்களின் அரிய செயல்….!!

வாலிபருக்கு கண்ணில் இருந்த இரும்பு துகளை மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் துல்லியமாக அகற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் முருகேசன் நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக முருகேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வலது கண்ணும், மூக்கும் இணையுமிடத்தில் இரும்புத் துகள் இருந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் முருகேசன் மருத்துவர்களிடம் தான் மலேசியாவில் வேலை பார்க்கும் போது கியர்பாக்ஸ் வெடித்ததால் இரும்புத் துகள்கள் வலது கண்ணில் தெறித்தது. இதனால் நான் அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஆனால் சிடி ஸ்கேன் எடுக்க வில்லை என முருகேசன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முருகேசனுக்கு மருத்துவமனையில் மருத்துவர் ராஜ கணேஷ் தலைமையில் ஆறுமுகம், அருணகிரி, ராயப்பன்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் எண்டோஸ்கோப் மூலம் மூக்கு வழியாக கண்ணுக்குள் இருந்த இரும்பு துகளை 4 மணி நேரத்திற்கு பிறகு துல்லியமாக அகற்றியுள்ளனர்.

மேலும் ஒரு வாரத்திற்குப் பிறகு முருகேசன் கண்பார்வை பரிசோதனை செய்தபோது எனக்கு கண் பார்வை நன்றாக இருப்பதாகவும் தலைவலி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முருகேசன் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கும், தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் தமிழக அரசிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையின் முதல்வர் பூபதி நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை பாராட்டியுள்ளார்.

Categories

Tech |