Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

Maruti Suzuki: இந்தியாவில் 40,618 கார்கள் திரும்பி பெறப்படும் …!

கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் தயாரித்த கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. Fuel hose-ல் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யவே இந்த 40,618 வாகனங்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி நிறுவனம்.

Image result for maruti wagon r

இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் புது ஜெனரேசன் வாகன் ஆர் காரை அறிமுகம் செய்தது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரின் Fuel hose-ல் தான் இந்த கோளாறு உள்ளது என்றும் 1.2 லிட்டர் இன்ஜின் கொண்ட காரில் எந்த கோளாறும் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image result for maruti wagon r

அதே சமையம் வாடிக்கையாளர்கள் தங்களது காரில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிந்து கொள்ள, வாடிக்கையாளர்கள் தங்கள் காரின் chasis number-ஐ மாருதி சுசுகி இணையதளத்தில் டைப் செய்து தெரிந்து கொள்ளலாம்  என இந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Image result for maruti wagon r

மேலும், சமீபகாலமாக ஆட்டோமொபைல் துறை மாபெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக பல புதிய  திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |