இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய விடாரா பிரெஸ்ஸா காரின் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்புறம் அதிகளவு மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்த காரின் டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஸ்பாயிலர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,
ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2020 விடாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1462சிசி என்ஜின் 103.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்கிறனை வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.