மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் கே சீரிஸ் மற்றும் 1.0 லிட்டர் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இது 82 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 67 பி.ஹெச்.பி. செயல்திறனை வழங்குகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 1.2 லிட்டர் வேரியண்ட்டில் மாருதியின் ஏ.ஜி.எஸ். ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , மாருதி நிறுவனம் சமீபத்தில் எக்ஸ்.எல்.6 என்ற பெயரில் புதிய எம்.பி.வி. காரை அறிமுகம் செய்தது. இந்த அதிக அளவில் விற்பனையாகும் எர்டிகா மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்.எல்.6 காரானது நெக்சா விற்பனையகங்களி்ல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய வேகன்ஆர் காரும் நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாருதி நிறுவனம் மற்றொரு ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காருக்கு எஸ் பிரெஸ்ஸோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் ஆல்டோ மற்றும் செலரியோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.