வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பாக பொதுமக்கள் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பலராம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் என்பவர் பூட்டு சாவி சின்னம் மற்றும் பெரியசாமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுப்பிரமணியனை விட பெரியசாமி என்பவர் 16 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த சுப்பிரமணியனின் ஆதரவாளர்கள் 200-க்கும் அதிகமானவர்கள் வாக்குகள் எண்ணப்பட்ட மையத்தின் முன்பாகக் கூடி மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.