Categories
உலக செய்திகள்

“மார்வெல் ரசிகர்களுக்கான வரப்பிரசாதம்!”.. டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க்கில் புதிய கேம்பஸ்..!!

அமெரிக்காவில் டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க்கில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், புதியதாக  அவெஞ்சர்ஸ் கேம்பஸ் திறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க் அமைந்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவலால் அடைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியிலிருந்து சில விதிமுறைகளுடன் திறக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, வரும் ஜூன் 15-ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் இல்லாமல் பார்வையாளர்கள் அனைவரும் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக டிஸ்னிலேண்டில் புதியதாக அவெஞ்சர்ஸ் கேம்பஸ் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த கேம்பஸில் வகான்டா வாரியர்ஸ், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் மற்றும் ஸ்பைடர் மேன் ஆகிய உடைகளில் பலபேர் ஸ்டண்ட் செய்யப்போகிறார்கள். மேலும் மேஜிக் ட்ரிக்ஸ் செய்யவுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் பலவகையான மார்வெல் சாதனங்கள் விநியோகிக்கப்படுகிறது. அதாவது படத்தில் மட்டுமே பார்த்த சாகசங்களை நேரில் பார்ப்பதற்கு பலருக்கும் ஆசை இருக்கும். எனவே பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக அவெஞ்சர்ஸ் கேம்பஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |