Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

உல்லாசமாக இருப்பதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் தாக்கி, நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான சுரேஷ்(25) என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் 1500 ரூபாயை கட்டணமாக வாங்கிக் கொண்டு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் பணம் தருவதாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மசாஜ் செய்த இளம்பெண்ணை சுரேஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சுரேஷ் பெண்ணை தாக்கி அவரிடமிருந்த தங்க நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து மசாஜ் சென்டர் ஊழியர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது கூடுதல் பணம் கொடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு பலமுறை சுரேஷ் அந்த இளம்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் பலமுறை செலவு செய்தும் ஆசை நிறைவேறாத கோபத்தில் இளம்பெண்ணை தாக்கி நகையை பறித்ததாக சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |