Categories
கோயம்புத்தூர் கோவில்கள் மாவட்ட செய்திகள்

மாசாணியம்மன் கோவில் தேரோட்டம்.. உள்ளாட்சி துறை அமைச்சர் பங்கேற்பு..!!

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்,  திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக நேற்று தேர்வீதி உலா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

மஞ்சள் பட்டு உடுத்தி அருள்பாலித்த மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனையடுத்து நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

Categories

Tech |