இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில் அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார் 325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது.
இந்த காரில் முந்தைய மாடல்களை விட பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின் எடையானது ஒரே சமமாக பரவும் விதமாக வடிவமைப்புடனும் மற்றும் ஆப்பிள் கார்பிளே,ஆண்ட்ராய்டு ஆட்டோ, 17 ஸ்பீக்கர்கள் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் போன்றவைகள் பொருத்தப்பட்டுள்ளது.