சேப்பக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள் :
சேப்பங்கிழங்கு-கால் கிலோ
ஓமம்-அரை டீஸ்பு ன்
கடுகு-அரை டீஸ்பு ன்
மஞ்சள் தூள்-அரை டீஸ்பு ன்
மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பு ன்
தனியாத் தூள்-1 டேபிள் ஸ்பு ன்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில்; எண்ணெய் ஊற்றி, சேப்பங்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும்.கிழங்கு பொன்னிறமானதும் தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் ஓமத்தைப் போட்டு பொரிய விடவும்.பொரிந்ததும் சேப்பங்கிழங்கைச் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு கறி தயார்.இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இப்பொது சுவையான