அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த 38 வயதுடைய நபர் ஒருவர் மாஸ்க் அணியாமல் சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு முகத்தை மறைத்திருந்ததால் அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகருக்கு செல்லும் யுனைட்டெட் என்னும் விமானத்தில் 38 வயதாகும் ஆடம் என்பவர் ஏறியுள்ளார். ஆனால் இவர் முகக் கவசத்திற்கு பதிலாக சிவப்பு நிற உள்ளாடையை அணிந்துகொண்டு விமானத்தில் ஏறியுள்ளார்.
இதனை கண்ட விமான பணிப்பெண்கள் முக கவசம் அணியாவிட்டால் கீழே இறக்கிவிடபடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் 38 வயதாகின்ற ஆடம் விமான பணிப்பெண்களுடன் மிகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக சில சக பயணிகளும் விமான பணி பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதன்பின்பு இறுதியாக முக கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை அணிந்து கொண்டு விமானத்தில் ஏறிய 38 வயதாகும் ஆடம் என்பவரும், அவருக்கு ஆதரவாக பேசிய சக பயணிகளும் அங்கிருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.