Categories
தேசிய செய்திகள்

மாஸ்க், சானிடைசர்களை அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு – இனி அதிக விலைக்கு விற்க முடியாது!

கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முக கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ள தேவையான முகமூடி (மாஸ்க்), கையுறை (க்ளவுஸ்) மற்றும் கைச்சுத்திகரிப்பான் (சானிட்டைஸர்) ஆகியவை தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த இந்த பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த 100 நாள்களுக்கு அதாவது ஜூன் 30, 2020 வரை இந்த பொருட்கள் அத்தியாவசியப் பொருள்களாக இருக்கும்.

மேலும் இவற்றிற்கு பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்த பொருட்கள் எந்த விதமான தட்டுப்பாடும் இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் இந்த பாதுகாப்பு பொருட்களை பதுக்குவோர் மீதும், இவற்றை அதிக விலைக்கு விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகார்கள் இருந்தால் 1800-100-400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |