Categories
மாநில செய்திகள்

கடலுக்கு அடியில் முககவசங்கள்…. ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரின் செயல்… 1 டன் அளவில் அகற்றம்….!!

கடலுக்கு அடியில் கிடந்த ஒரு டன் எடைக்கும் அதிகமான முக கவசங்களை அரவிந்த் என்பவர் சேகரித்து அப்புறப்படுத்தி வீடியோ வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

புதுச்சேரி மாவட்டத்தில் கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை அரவிந்த என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆர்வலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். புயல் மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

அந்த சமயத்தில் கொரோனாவிற்காக பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட முகக் கவசங்கள் ஆறுகள் மூலமாக தண்ணீரில் அடித்து வரப்பட்டு கடலுக்கு அடியில் தேங்கிக் கிடப்பதை கண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முககவசங்களை அகற்றுவது என அரவிந்த் முடிவு செய்து தன்னுடன் பயிற்சியிலிருந்து ஐந்து பேருடன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்கு அடியில் சென்றுள்ளார். சுமார் 60 அடி ஆழத்தில் இறங்கி கடல்களில் தேங்கிக்கிடந்த முக கவசங்களை சேகரித்துள்ளார்.

இதனை உடனிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அரவிந்த் கூறியதாவது “கடலுக்கு அடியில் இன்னும் தேங்கி கிடக்கும் முகக் கவசங்களை தொடர்ந்து அகற்றுவேன்” என கூறியுள்ளார். சுமார் ஒரு டன் எடைக்கும் அதிகமாக முககவசங்களை அவர் கரைக்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |