கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்.
சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். இதனால் கொரோனா தமிழகத்தில் வேகமெடுத்தது.
அதனைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை வெளியில் மாற்றப்பட்டது. மதுரவாயில் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மாற்றப்பட்டது. பலகட்ட தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு கொரோனாவானது 2020 கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் கொரோனாவானது அதிகரித்ததன் காரணமாகவும் இதே நிலையே நீடித்தது. அப்போதும் கோயம்பேடு சந்தை மாற்றப்பட்டு வெளியில் இருந்தே காய்கறிகள் விற்கப்பட்டது.
தற்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளும் குறிப்பாக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் pf7 என்ற புதிய வகையிலான கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் உலக நாக்குகள் மட்டுமல்லாது இந்தியாவிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில பல்வேறு கட்டுப்பாடுகளையும், அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சத்தையான கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என்று டிஎம்சிஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள்.
மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த பிறகே அங்கன்வாடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.