Categories
உலக செய்திகள்

‘மாஸ்க் இருந்தா போதும்’…. கொரோனா பாதிப்பைக் கண்டறிய…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

கொரோனா தொற்றைக் கண்டறிய புதிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தொற்று அறிகுறியில்லாமல் பாதிக்கப்பட்டவர்களை  கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப முறை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை  கயோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, நெருப்புக்கோழியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை முககவசத்தின் மீது தடவ வேண்டும். இதனை அடுத்து அதன் மீது புறஊதாக் கதிர்களை செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தும் பொழுது முககவசம் ஒளிருமானால் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.  ஆகவே அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த சிறப்பு முககவசத்தை வணிகரீதியாக விற்பனைக்கு கொண்டு வர ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |