Categories
தேசிய செய்திகள்

முககவசம் அணியாததால்… மகளின் கண் முன்னே தாயை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முழு கவசம் அணியாமல் சென்ற பெண்ணை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாமல் சென்ற பெண்ணை அவர் மகள் கண்முன்னே போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்ற முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊரடங்கு சமயத்தில் மளிகை பொருட்களை வாங்குவதற்காக மகளுடன் வெளியில் வந்த தாய் முகக் கவசம் அணியாததால் போலீசார் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |