Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலையா ….? ரூ 200 அபராதம் ….. நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை….!!!

நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா  தொற்று பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . ஆனால் பொதுமக்கள் சிலர் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்  தம்புராஜ்  உத்தரவின்படி சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடைகள், மார்க்கெட் ,வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சாலைகளில் முகக் கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று நாகையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனை சாலையில் நகராட்சி ஆணையரான ஸ்ரீதேவி மேற்பார்வையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான  பணியாளர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே முக கவசம் அணியாமல் சென்ற 30 பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |