மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முக கவசம் அணிந்து வித்தியாசமான முறையில் பெண் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நல்லி கவுண்டன் பாளையம் பகுதியில் தவமணி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது கடைக்கு வருபவர்களிடம் தவமணி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியும், சிலர் அதனை கடைபிடிக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து அவரது டீக்கடைக்கு எதிரே உள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முக கவசம் அணிவித்து தவ மணி கிராம மக்களிடையே புதுவகையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரது கடைக்கு செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து செல்கின்றனர். இவ்வாறு வித்தியாசமான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய தவமணியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.