Categories
உலக செய்திகள்

“மாஸ்க் விற்றே கோடீஸ்வரர் ஆன இளைஞர்கள்”… இப்போ சிக்கல்ல மாட்டிகிட்டு முழிக்காங்க… காரணம் என்ன தெரியுமா….?

சுவிட்சர்லாந்தில் கொரோனா காலகட்டத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து கோடீஸ்வரரான இரண்டு இளைஞர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில்  23 வயது நிரம்பிய Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவ தொடங்கியபோது முகக்கவசங்களை  விற்பனை செய்துள்ளனர். முகக்கவசங்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை லாபம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து தங்களுடைய நிறுவனத்தின் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால் தற்போது அதிக விலைக்கு தரமற்ற போலி முகக்கவசங்களை அரசிற்கு விற்றதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.  உதாரணமாக எகிப்து மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து இருவரும் 7,00,000 முகக்கவசங்களை இறக்குமதி செய்துள்ளனர். பின்னர் அவற்றை ராணுவத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் எகிப்து மருந்து தயாரிப்பு நிறுவனம் அப்படி ஒரு முகக்கவசங்களை  நாங்கள் உற்பத்தி செய்யவே இல்லை என்று கூறியுள்ளது.

எனவே இரு இளைஞர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்Jascha Rudolphi-யும் Luca Steffen-ம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் ஜெர்மன் சுகாதார அமைச்சகம் தாங்கள் விற்பனை செய்யும் முகக்கவசங்களை பாராட்டி எழுதிய கடிதத்தை தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளனர் .

இரு இளைஞர்களும் திடீரென இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவதற்கு காரணம் என்ன தெரியுமா? Jascha Rudolphi, Luca Steffen ஆகிய இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.5 மில்லியன் மதிப்புள்ள விலை அதிகமான கார்களை வாங்கி உள்ளார்கள். அதனால் ஊடகங்களின் பார்வை இவர்களின் மீது திரும்பியதன் மூலம் இருவரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கின்றனர்.  வியாபாரம் செய்து வரி  எல்லாம் சரியான முறையில் செலுத்தியதாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால் தாங்கள் செய்த ஒரே ஒரு தவறு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விலையுயர்ந்த கார்களை வாங்கியது என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |