தமிழகம் முழுவதும் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தொடர்ந்து மக்கள் முறையான முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், வெளியே வந்தபின் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பின் வீட்டிற்கு திரும்பிச் சென்றபின் கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு உங்களை பராமரிப்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் கடைபிடிக்கக் கூடிய முக்கியமான ஒன்று மாஸ்க் அணிந்து வெளியே வருவது.
ஆனால் பெரும்பான்மையான மக்கள் சரியான தரமான மருத்துவ மாஸ்க் அணிவது இல்லை. இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், சரியான முறையான மாஸ்க்கை வாங்குவதற்கு பெரும்பாலானோரிடம் பொருளாதார சிக்கல் இருப்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்படி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டையில் இருக்கும் ஒவ்வொரு பெயருக்கும் இரண்டு மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.