Categories
கொரோனா

மாஸ்க்கை இப்படி அணியாதீர்கள்…தொற்று வந்துவிடும்…எச்சரிக்கும் மருத்துவர் …!

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிவது குறித்து டாக்டர் இந்திரா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? மற்றும் எப்படி பயன்படுத்தக்கூடாது? என பிரபல டாக்டர் இந்திரா நெடுமாறன் கூறுகையில்: மாஸ்க்கை கையால் தொட்டலும் கொரோனா தொற்று ஏற்படலாம் என எச்சரிக்கிறார்.

 

மாஸ்க் அணியும் போது செய்ய வேண்டியது…

  • கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருந்தகங்களில் விற்கப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் மட்டுமே அணிய வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். துணி மாஸ்க் அணிய கூடாது.
  • கொரோனா தொற்று இல்லாதவர்கள் மாஸ்க்கை கழட்டும்போது கவனமாக கழற்றி குப்பையில் வீச வேண்டும். கையால் தொடவே கூடாது. ஏனெனில் மாஸ்கில் கொரோனா வைரஸ் இருந்தால் அது கைகளில் பட்டு தனக்கோ அல்லது பிறருக்கோ பரவலாம். அறிகுறிகள் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் சர்ஜிகல் மாஸ்க் அணிய வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
  • கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், அறிகுறிகள் இல்லாதவர்கள் என எவராக இருந்தாலும் வெளியில் செல்லும் போது அவசியம் மாஸ்க் அணிவது பாதுகாப்பானது. மாஸ்க் அணிந்தாலும் 6 அடி இடைவெளியில் நின்று பேசவேண்டும்.
  • மாஸ்க் நீண்டநேரம் அணிந்து முகத்தில் காயம் ஏற்பட்டால் விரைவில் தேங்காய் எண்ணெயை அல்லது முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும் க்ரீம்களையும் உபயோகிக்கலாம்.
  • கொரோனா தொற்று இல்லாதவர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் அல்லது துணி மாஸ்க் எது வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். துணி மாஸ்க் குறைந்தபட்சம் 5 வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு துணி மாஸ்க் பயன்படுத்த வேண்டும். பிறகு சோப்பு போட்டு துவைத்து வெயிலில் காய வைத்து மூன்று நாட்கள் கழித்து பின்னர் தான் பயன்படுத்த வேண்டும்.

 

மாஸ் அணியும்போது செய்யக்கூடாதவை…

  • பல ஆண்கள் துண்டையும், பெண்கள் புடவையும் மாஸ்க் போன்று கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்பவர்கள் வீட்டிற்கு வந்ததும் கழட்டி வைத்துவிட்டு பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் கொரோனா தொற்று இருக்கும் என்பதால் அப்படி வைக்கக்கூடாது. வெளியில் சென்று வந்தவுடன் அந்த துணியை நன்கு துவைத்து காய வைத்து தான் பயன்படுத்த வேண்டும்.
  • மாஸ்க்கை வாய்க்கு மட்டும் போட்டுவிட்டு மூக்கிற்கு போடாமல் இருந்தால்  தொற்று வந்துவிடும். அதேபோல் மாஸ்க்கை தொட்டுவிட்டு கண், மூக்கு, வாய் என எதையும் தொடக்கூடாது.
  • என் -95 மாஸ்க் அனைவரும் அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அணிந்துகொள்ளலாம். தூய்மை பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் அணிவது அவசியம்.
  • கொரோனா விழிப்புணர்வு குறித்த ஒவ்வொருவரும் ஒரு ‘எஸ்.எம்.எஸ்’ செய்ய வேண்டும். எஸ் என்பது சோசியல் டிஸ்டன்ஸ், எம் என்பது மாஸ்க், எஸ் என்பது சானிடைசர் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார், டாக்டர் இந்திரா நெடுமாறன்.

Categories

Tech |