Categories
உலக செய்திகள்

ஆதிக்கம் செலுத்த நினைக்கும் தீவிரவாதிகள்…. தாக்கப்பட்ட மசூதி…. 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம்….!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் மசூதியில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றது. மேலும் அவர்கள் அங்கு இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் சமீபத்தில் குண்டஸ் நகரில் உள்ள மசூதியில்  தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இது குறித்து அங்குள்ள உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றை வெளிட்டுள்ளது. அதில் ” ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத்  தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலானது ஷியா இஸ்லாமியர்களை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானில் தலீபான்கள் ஆட்சி அமைத்த பிறகு அங்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

Categories

Tech |