தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படககுழுவினர் அறிவித்துள்ள நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நேரடியாக வாரிசு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக வந்த வாரிசு திரைப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
మీకూ మీ కుటుంబసభ్యులు అందరికీ దీపావళి శుభకాంక్షలు 🧨
Let’s celebrate #Vaarasudu #Varisu in theaters for Sankranthi 2023 🔥#VarisuPongal#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @KarthikPalanidp @Cinemainmygenes @scolourpencils @vaishnavi141081 pic.twitter.com/va1NHcbBmN
— Sri Venkateswara Creations (@SVC_official) October 24, 2022