Categories
உலக செய்திகள்

“கோல்ப் மைதானத்திற்குள் நுழைந்த கங்காரு கூட்டம்!”.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு..!!

ஆஸ்திரேலியாவில் கோல்ப் மைதானத்திற்குள் திடீரென்று கங்காரு கூட்டம் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு கோல்ப் மைதானத்தில், ஒரு இளம்பெண் கோல்ப் விளையாட தயாராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று, அதிகமான கங்காருக்கள் கூட்டமாக, மைதானத்திற்குள் புகுந்துவிட்டது. மேலும், அந்த பெண்ணை நோக்கி, படையெடுத்து வருவது போல் வந்திருக்கிறது.

இதனை சிறிதும் எதிர்பாராத அந்த பெண், என்ன செய்வதென்று தெரியாமல், பதற்றமாக நிற்கிறார். ஆனால் அந்த கங்காருக்கள், அமைதியாக அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டன. அதன்பின்பு, அந்த பெண் கோல்ப் விளையாட தொடங்கியுள்ளார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Categories

Tech |