Categories
அரசியல் தேசிய செய்திகள்

3,325 சீக்கியர்கள் படுகொலை… விசாரணைக்கு அனுமதி… காங்கிரஸை வச்சு செய்யும் பிஜேபி…!!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அபிமானிகள் நடத்திய  கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது கமல்நாத் நிகழ்வு இடத்தில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அத்துடன் குற்றவாளிகள்  5 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்தார் என்ற மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது.

Image result for சீக்கியர்கள் படுகொலை

இந்நிலையில் கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி அளித்துள்ளார். இது முற்றிலும்  பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Image result for சீக்கியர்கள் படுகொலை கமல்நாத்

அதனைத் தொடர்ந்து பஞ்சாப் டெல்லியில் 3,325 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கலவரம் குறித்து விசாரிக்க நானாவதி கமிஷன் நான்கு வழக்குகளில் மட்டுமே விசாரிக்க அனுமதி அளித்திருந்தது. ஆனால் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. கமல்நாத் குறித்த ஆதாரங்களை யார் வேண்டுமானாலும் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு அளிக்கலாம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |