டெல்லியில் ஆளும் கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் மசாஜ் செய்வது போன்ற சொகுசு வாழ்க்கைகளை அனுபவிப்பது தொடர்பான வீடியோக்களை பாஜக அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய தனிப்பட்ட அறையில் இருக்கும் சிசிடிவி கேமரா தொடர்பான வீடியோக்களை வெளியே விடுவதற்கு அமலாக்கத்துறை அனுமதிக்க கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் மற்றும் வீடியோக்கள் எதையும் வெளியிடக்கூடாது என அமலாக்கத்துரைக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் தொடர்ந்து அமைச்சரின் வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருந்ததால். அமலாக்கத்துறை மீது அமைச்சர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சத்யேந்தர் ஜெயின் தொடர்ந்தார். அமலாக்கத்துறை மீது கொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புகாரை திரும்ப பெற்றுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பொருத்தமான மண்டபத்தை அணுகி உரிய நிவாரணம் பெற இருப்பதாக கோர்ட்டில் அமைச்சரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.