கனடா நாட்டில் மசாஜ் செய்வதற்காக சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மசாஜ் தெரபிஸ்ட் கைதாகியுள்ளார்.
கனடா நாட்டின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள மசாஜ் செய்யும் மையத்திற்கு 40 வயதுடைய ஒரு பெண் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு மசாஜ் செய்த தெரபிஸ்ட் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதனைதொடரந்து, அந்த நபர் கைதாகியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி அன்று அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். அந்த தெரபிஸ்ட்டால் மேலும் பல பெண்கள் பாதிப்படைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுவதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து சிறப்பு பிரிவினரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.