துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்காவின் ஓக் புரூக் டெரஸிஸ் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழா நடைபெற்றது. அதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிகாகோவில் அமெரிக்கன் மல்டி எத்தினிக் கோலிஷன் சார்பில் நடைபெற்ற ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ் 2019’ விழாவில் ‘சர்வதேச வளர்ந்து வரும் தலைவர் ஆசியா விருது’ துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட்டது.பின்னர் விழாவில் பேசிய துணைமுதலமைச்சர், ‘பொதுவாழ்வில் எனக்கு கிடைக்கும் இந்தப் பதவிகளும், பாராட்டுகளும், விருதுகளும், மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், பேரன்பு கொண்ட தமிழக மக்களுக்குமே உரித்தானவை’ என்றார்.