Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாகும் போஸ்டர்….. ஆகஸ்ட் 14இல் ரிலீசாகும் மாஸ்டர்…? வெளியான விளக்கம்…!!

ஆகஸ்ட் 14-ல் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து வைரலாகும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் சூர்யாவின் சூரரைப்போற்று, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம், இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஆகஸ்ட் 14ம் தேதி அமேசான் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் அமேசான் லோகோவில் இருப்பது போன்றும், அதற்கான ட்ரெய்லர் லிங்குகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் அமேசானின் போஸ்டரில் இருப்பது கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கொரிய மொழி மாஸ்டர் படம் என 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்டர் திரைப்படம் எவ்வளவு தாமதமானாலும் திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |