Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவின் இடத்தை பிடித்த மாஸ்டர் நடிகை” மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போதைய ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ராஷ்மிகா சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திவுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சீயான் விக்ரம் மற்றும் பா. ரஞ்சித் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் முதலில் நடிகை ராஷ்மிகாவை தான் ஹீரோயின் ஆக புக் செய்தார்களாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிகை ராஷ்மிகாவால் விக்ரமுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனதாம். இதன் காரணமாக மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனை விக்ரமுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |