Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ வசூல்…. தமிழ்நாட்டில் இவ்ளோதானா…. தயாரிப்பாளர் விளக்கம்…!!!

மாஸ்டர் திரைப்படம் தமிழ் நாட்டில் குறைந்த அளவுதான் வசூல் செய்துள்ளது என்று பேசப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் 70 கோடி தான் வசூல் செய்துள்ளது என்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து பல கமெண்ட்டுகளை செய்து வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறு படங்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி தான் பேசி வருகிறேன்.

எந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றி நான் கருத்து தெரிவிக்கவில்லை. மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தவறு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்டர் திரைப்படம் 140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதன் பெரிய வெற்றியைப் பற்றி விவாதிப்பதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |