மாஸ்டர் கார்டு மீது சுமார் ஓராண்டாக விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை மீறியதால் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 14 முதல் மாஸ்டர் கார்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ‘இந்நிறுவனத்தின் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது’ என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை நீக்கி மாஸ்டர் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது.
Categories