தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- சென்னை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : இயக்குநர்
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பணியில் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.75,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director of rural Development and Panchayat Raj, Panagal, Saidapet, Building, Chennai – 600015, Tamil Nadu.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.01.2022 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnrd.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.