மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் படம் ஹிந்தி, மலையாளம் ,தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் சைன் இந்திய நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் ஹரித்திக் ரோஷனிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது . அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .