Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் “மாஸ்டர்”…. உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா…?

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை யார் கைப்பற்றி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும் தற்போது அதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது.

இதை தொடர்ந்து இப்படத்தின் இந்தி உரிமையை கைப்பற்றி இருப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனரும், நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா தான் இப்படத்தின் ஹிந்தி உரிமையை கைப்பற்றி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |