Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ கூட்டணி மீண்டும் இணைகிறதா?… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது . இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது .

Lokesh Kanagaraj: You will see a new Vijay sir in 'Master'!

இந்நிலையில் தளபதி 66 படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது . மீண்டும் மாஸ்டர் கூட்டணி இணைய இருப்பதாக வெளியான இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |