Categories
சினிமா தமிழ் சினிமா

புது காருடன் விஜய் சேதுபதியை சந்தித்த மாஸ்டர் மகேந்திரன்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

மாஸ்டர் மகேந்திரன் புது கார் வாங்கியதற்கு விஜய் சேதுபதி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான ‘நாட்டாமை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திலும் மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காருடன் அவர் நடிகர் விஜய் சேதுபதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன் கண்ட விஜய் சேதுபதி அவரை வாழ்த்தி, அந்தக் காரையும் ஓட்டிப் பார்த்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், மாஸ்டர் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்னோட பவானி. விஜய் சேதுபதி அண்ணா.’ என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |