Categories
சினிமா தமிழ் சினிமா

என் புது வாழ்க்கைக்கு மாஸ்டர் படமே காரணம்…. கார் வாங்கிய மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் ட்விட்…!!!

தனது புதிய வாழ்க்கைக்கு மாஸ்டர் படமே காரணம் என்று மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சில படங்கள் கதாநாயகனும் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் மற்றும் விதையின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் சாவியை மாஸ்டர் பட இயக்குனர் லொகேஷ் கனகராஜ் கையில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தன்னுடைய புதிய வருடம், புதிய வாழ்க்கை, புதிய பயணம் அனைத்தும் மாஸ்டர் படத்திலிருந்து தொடங்கியுள்ளது என்று அவள் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் மகேந்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |