விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது
இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வந்தனர்.பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக படக்குழு மாஸ்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டரை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட்டுள்ளனர்.
அதில் விரைவில் மாஸ்டர் உங்களை சந்திப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் மல்டிபிளெக்ஸ் திரையரங்கான ஐநாக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் மிக விரைவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது என ட்வீட் செய்துள்ளனர். விஜய் நடிப்பில் இத்தனை மொழிகளில் வெளியாக இருக்கும் முதல் படம் இதுவே இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்